திருக்கோயில் பொத்தானை பள்ளிவாசல் தொழுகைக்காக திறக்கப்பட்டுள்ளது




றியாஸ் இஸ்மாயில்

சர்ச்சைக்குரிய திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில்  பொத்தானையில் உள்ள புராதன பள்ளிவாயலுக்குச் செல்வதற்கான தடை அகற்றப்பட்டுள்ளதோடு, அதற்கான தடை அறிவித்தல் பலகை அகற்றுவதற்குமான உடன்பாடு காணப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தோடு நேற்று (25.01.2017)   கொழும்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  

இப் பேச்சுவார்த்தையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவவார வேலைவாய்ப்புத்துறைச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 இப்பிரதேச மக்கள் இவ்விடயத்தினை முன்னெடுத்துச் சென்ற அனைத்து தரப்பினருக்கும் இதன் போது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.