அக்கரைப்பற்று மக்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரசை ஆதரிப்பர்



முஸ்லீம் காங்கிரசுக்கு இன்றிருக்கின்ற சவால்களை வெற்றிகொள்ள தலைமை மேற்கொண்டுள்ள முடிவானது மிக சாலப் பொருத்தமானதகும். ஜனாதிபதி தேர்தலில் மு.கா வின் தலைமை அம்பாறை மாவட்டத்திற்கு வாக்களித்ததை நிறைவேற்றுவதற்கான தருணமும் இதுவே என்றார் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் PT. ஜமால், இஸ்லாமாபாத் மக்களின் குடிநீர் பிரட்ச்சனை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. 

மேலும், "கல்முனை தொகுதிக்கு முஸ்லீம் காங்கிரஸ் அமைச்சுப் பொறுப்பை அதிகாரமாக வழங்கியுள்ளது. அத்துடன் இழந்த மாகாண சபை உறுப்புரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிந்தவூர் பிரதேசமும் அதிகாரத்தைப் பெற்றுள்ள நிலையில், அட்டளைச்சேனையின் நீண்ட நாள் கனவான பாராளுமன்ற உறுப்புரிமை மிக முக்கியமானதொன்றாகும். கட்சியில் நீண்ட கால அனுபவசாலிகள் இதனை கருத்தில் கொள்ளவில்லை. இந்நிலையில் அட்டளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவது மிக, மிக அவசியமானதாகும்.

அதே போன்று அக்கரைப்பற்று பிரதேசம் மு.கா வில் நம்பிக்கை கொண்டு அங்கிருந்த அதிகாரங்களை தோற்கடித்துள்ளது. இதன்பொருட்டு நாம் அம் மக்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். எவரது தனிப்பட்ட தேவைகள், ஆலோசைனைகளுக்கு அப்பால் தலைமை அக்கரைபற்றுக்கு அதிகாரம் வழங்க மேற்கொண்டுள்ள முடிவு தலைமையின் அரசியல் சாணக்கியத்தின் உச்ச கட்டமாகும்.

இதே போன்று இறக்காமம் பிரதேசத்தின் வரலாற்றில் முதல் தடவையாக மாகாண அந்தஸ்த்து கிடைக்கின்றமை என்றும் அம்மக்களால் மறந்து விட முடியாத ஒன்றாகும்.
எனவே மு.கா வின் போராளிகளின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்துள்ள எமது தலைமையை நாம் என்றும் நேசிக்கின்றோம், எமது தலைமையின் கீழ் என்றும் நாம் போராளிகளாகவே இருப்போம் என்பதையும் உறுதிபட தெரிவிக்கின்றோம் எனவும் கூறினார்.