அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் சாதனை

NEWS
0 minute read

எம்..றமீஸ்

இம்முறை வெளியான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி அட்டாளைச்சேனைதேசிய பாடசாhலையின் மூன்று மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும்  தரச் சித்தி பெற்று வரலாற்றுச் சாதனைபடைத்துள்ளனர் என கல்லூரியின் அதிபர் .எல்.கமறுதீன் தெரிவித்தார்.

இப்பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் 98 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்விப் பொதுத்தராதரப் பத்திரஉயர் தர பிரிவில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கமைவாக இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய எப்.ஹப்லல்எம்.எஸ்.சக்கி மற்றும் எம்.எச்.சியாறா ஆகியமாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும்  தரச் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இது தவிர இப்பரீட்சைக்குத் தோற்றிய 10 மாணவர்கள் 8 பி சித்தியினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளனர்அத்துடன் இப்பரீட்சைக்குத் தோற்றிய அதிகப்படியான மாணவர்கள் பல பாடங்களிலும் நூறு வீதசித்தியினைப் பெற்றுள்ளதுடன் இம்முறை உயர்தர வகுப்புகளில்   கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வி கற்கஅதிமான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள்மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள்பெற்றோர்கள் மற்றும்பாடசாலைச் சமூகத்தினர் போன்றோருக்கு தமது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அதிபர் கமறுதீன்மேலும் தெரிவித்தார்.
To Top