கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் எதிர் நோக்கும் கல்வி ,அடிப்படை சுகாதாரம் ,வாழ்வாதாரம் போன்றவற்றை மேம்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (29.06.2025) மாலை கலாநிதி அல்-ஹாஜ் பௌசுல் ஜிப்ரி அவர்களின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றது
பிரதி அமைச்சர் அஷ் ஷேக் முனீர் முலப்பர் அவர்களும் இதில் கலந்து கொண்டிருந்ததோடு இதன் போது குறித்த கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற அத்தனகல்ல ,நீர்கொழும்பு ,மள்வானை போன்ற பகுதி மக்கள் எதிர் நோக்குகின்ற கல்வி ,அடிப்படை சுகாதாரம் ,வாழ்வாதாரம் போன்றவற்றை மேம்படுத்துதல் தொடர்பிலான பல வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது
இதன் போது கலாநிதி அல்-ஹாஜ் பௌசுல் ஜிப்ரி அவர்கள் தான் மாவட்ட முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கான முழுமையான பங்களிப்பை வழங்க தயாரக இருப்பதாக குறிப்பிட்டதோடு மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகளை நடத்தி அவர்களை சிறந்த தலைவர்களாக உருவாக்க தன்னாலான முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார்
மேலும் அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்த தாய்சேய் மகப்பேற்று சுகாதார நிலையங்களை நவீன மயப்படுத்தி அவற்றில் தாய் மார்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வறியவர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்களை முன்னெடுக்க இருப்பதாக குறிப்பிட்டார்
இங்கு தான் இந்தியாவில் இவ்வாறான பல வேலைத்திட்டகளை செய்து வருகின்றமை தொடர்பிலும் குறிப்பிட்டு காட்டினார்
இதன் போது எதிர்காலத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கத்தினூடக தேவையான சகல விடயங்களையும் தான் முன்னின்று செய்து தர தயாராக இருப்பதாகவும் மக்கள்
நலனுக்காக அரசாங்கம் என்றும் துணை நிற்க தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் அஷ் ஷேக் முனீர் முலப்பர் உறுதியளித்தார்
இதன் முதற்கட்டமாக பியகம பிரதேச சபைக்கு உட்பட்ட மள்வானை பகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய ஒரு
கழிப்பறை தொகுதிக்கான கட்டிடத்தை அமைக்கவும் ,மள்வானை தாய் சேய் மருத்துவ நிலையத்தை நவீனமயமாக நிறுவி அதனூடாக சகல அடிப்படை வசதிகளையும் கொண்ட ஒரு மாதிரி வைத்தியசாலை (mini hospital) அமைப்பதற்கான அடிக்கல் முதற்கட்டமாக நடப்படும் எனவும் துரித கதியில் அது அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
இதனைத்தொடந்து இது படிப்படியாக ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
நிகழ்வில் கம்பஹா மாவட்டத்தையும் மள்வானையும் பிரதி நிதித்துவம் செய்யும் வகையில் அப்பகுதி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்