30 வருடத்தின் பின்னர் தொண்டமனாறு வடக்கு குடிநீர் பிரச்சினை தீர்வு கிடைத்துள்ளது

 
 
பாறுக் ஷிஹான்

30 வருடங்களாக குடிநீர் பிரச்சினை எதிர்கொண்டு வந்த தொண்டமனாறு வடக்கு பகுதிக்கு தற்போது குடிநீர் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தொண்டமனாறு வடக்கு மீன் பிடி சங்கம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச சபை இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

தொண்டமனாறு வடக்கு ஜே-384 கிராம சேவகர் பிரிவினை சேர்ந்த பெரிய கடற்கரை இசின்ன கடற்கரை நடுத்தெரு உள்ளிட்ட 3 பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

2016 ஆண்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்திற்கு அமைய இப்பிரதேசத்திற்கான குடிநிர் தேவையை அப்பகுதி பிரதேச சபையினர் Nசிய நீர் வழங்கல்   வடிகால் அமைப்பு  சபையுடன் இணைந்து இத்திட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இத்திட்டத்திற்கு சுமார் 8 இலட்சத்து 72 ஆயிரம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள 60 குடும்பங்களை சேர்ந்த 200 அங்கத்தவர்கள் பயன் பெறவுள்ளனர்.