வெள்ளம்பிட்டி மீதோட்டமுல்ல குப்பைமேடு சரிந்து 50ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

தமிழ் சிங்களப் புதுவருடமும் பெரிய வெள்ளி தினமுமான இன்று வெள்ளிக்கிழமை (14) கொழும்பு நகர்புற வெள்ளம்பிட்டி மீதோட்டமுல்ல குப்பைமேடு சரிந்து சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாகவும் சில பகுதியளவிலும் சேதமடைந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் தகம்புர ராகுல வித்தியாலயத்திற்கு அன்மித்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீதே குப்ழபமேடு திடீரேன சரிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்திற்கு மத்தியில் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கி விட்டனர். 

இதன்போது பலர் குப்பைமேடு சரிந்த வீடுகளுக்குள் அலறிக் கொண்டிருந்தனர் உடசடியாக அப்பகுதி மக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டதுடன் ஏழு பேரைக் காப்பாற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உள்ளிட்ட பலருக்கும் தகவல் அனுப்பியதன் பொருட்டு முப்படையினரும், பொலிஸாரும், அனர்த்த முகாமைத்து அதிகாரிகள் வைத்தியர்கள், அப்புலன்ஸ் வண்டிகள் என பல சம்பவ இடத்திற்கு வந்து குவிந்தன.

குறித்த குப்பை மேட்டுக்கு அருகில் உள்ள வீடுகள் சில முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதனுல் அகப்பட்டவர்களில் ஒரு சிறுமி உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாகவும் குறித்த வீட்டு உரிமையாளர் தெரிவித்ததற்கு அமைய படையினர் பெக்கோ இயந்திரம் மூலம் மலை ஏழுமணிவரை முயற்சித்தும் யாருடைய உடல்களோ அல்லது காணப்பட்டவர்களோ தென்படவில்லை எனினும் குறித்த பகுதிற்குள் பொதுமக்களை செல்லவிடாது படையினர் மீட்புப்பணிகளில் தொடர்ந்தம் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்