புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் 55 சதவீதமான மக்கள் அறியவில்லை

NEWS
0

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு உரிய முறையில் அறியப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்புக்கான பொதுக்கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படுவது தொடர்பில் 55 சதவீதமான மக்கள் அறியவில்லை என்று மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உரிய தெளிவுப்படுத்தல்கள் காரணமாகவே தமது குழுவுக்கு எழுத்து மூலம் மூவாயிரம் யோசனைகளும், வாய்மூலம் 2 ஆயிரத்து 216 யோசனைகளும் கிடைக்கப்பெற்றதாக அரசியல் யாப்புக்கான பொதுக்கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default