வில்பத்து மக்களை பகடைகாயாக்கிய அரசியல் கட்சிகளே பிரச்சினையை தீர்க்க முன்வாருங்கள்

NEWS
1 minute read
0
வில்பத்துக் காணி விவகாரம் தொடர்பான பிரச்சினையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகத் தலையிட்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல்வேறுபட்ட கஷ்டங்களுக்கும், இன்னல்களுக்கும் முகம்கொடுத்து நம்நாட்டில் சிறுபான்மை இன மக்கள் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய சிறந்ததொரு நல்லாட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்காக ஒன்றினைந்து ஆட்சி மாற்றத்துக்காக கைகோர்த்த போதிலும் தொடர்ந்தும் அம்மக்கள் கஷ்டங்களுடன் வாழும் நிலைமையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் இப்பிரச்சினையை ஜனாதிபதி, தனது சொந்தப் பிரச்சினையாகக் கருதி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு-காத்தான்குடியிலுள்ள தனது காரியாலயத்தில் 2017.04.04ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பின்போதே, அவர் இந்த வேண்டுகோளினை முன்வைத்தார்.

தொடரந்து அவர் தனது அறிக்கையில்

இந்த வில்பத்து காணி விவகாரத்தை வைத்துகொண்டு சில அரசியல் கட்சிகளும், சில சிறிய அரசியல் குழுக்களும் அதன் தலைமைகளும் அரசியல் செய்ய முற்படுவதாகவும் அதனை அக்கட்சிகளும், குழுக்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் மக்களை மென்மேலும் தங்களின் அரசியல் வங்குரோத்துக்காக பிரச்சினைகளுக்குள் தள்ளும் வகையிலான நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மக்களின் நலன்கருதி இந்த நல்லாட்சியில் சிறந்ததொரு தீர்வு ஒன்றினை எமது சமூகத்திற்குப் பெற்றுகொடுக்க அரசியல் தலைமைகள் முன்வரவில்லை என்றால் சிறுபான்மை சமூகத்திற்கு எந்த அரசாங்கத்திலும் அவர்களுக்குரிய தீர்வுகளை பெற்றுகொடுக்க முடியாது என்ற விடயத்தினை முன்வைத்து, ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)