கூட்டு எதிர்க்கட்சியை சுதந்திரக் கட்சியுடன் இணைக்க வேண்டும் : மஹிந்தவிடம் கோரிக்கை

NEWS


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், கூட்டு எதிர்க்கட்சியையும் இணைக்கும் பணியை மேற்கொள்ளுமாறு பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இந்த பணியை செய்தால், அவருக்கு போர் வெற்றியில் கிடைத்த புகழை விட அதிகமான புகழ் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே கூட்டு எதிர்க்கட்சி மே தினக் கூட்டத்தை நடத்த காலிமுகத்திடலை அரசாங்கம் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
Tags
3/related/default