இறக்காமம் மாணிக்கமடு புத்தர் சிலை வைப்பு விவகாரம் மாயக்கல் பிரதேசத்தில் விகாரை அமைப்பு விவகாரத்தில் முக்கிய பிரமுகர் ஒருவர் சம்மந்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த அரசாங்கத்தில் இனவாதங்களுக்கு தலைமை தாங்கி செயற்பட்ட ஒரு முக்கிய பிரமுகரே இந்த விடயத்திலும் தலையிட்டு வருவதாக அறியக் கிடைக்கிறது. குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ச்சி இடம்பெற்று வருகிறது. முஸ்லி்ம் அமைப்புகளுக்கும் இது தொடர்பான விடயங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த அரசாங்கத்தின் போது தீகவாபி தலைமையகமாக கொண்ட அஷ்ரப் நகர் ஒலுவில் துறைமுகம் இறக்காமம் வரிப்பத்தாஞ்சேனை போன்ற கிராமங்களை உள்ளடக்கிய ஒரு இராஜதாணியினை அமைப்பதென்ற ஒரு முக்கிய திட்டத்தின் கீழ் இவைகள் செயற்படுத்தப்படுகிறது. இதற்காக முக்கிய பிரமுகர் ஒருவர் செயற்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
சிங்கள பேரினவாத இயக்கங்களுடைய முக்கிய நோக்கமாக இருப்பது தீகவாபி வரிபத்தாஞ்சேனை இறக்காமம் அஷ்ரப் நகர் ஒலுவில் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக ஒரு சிங்கள பெரிய ஒரு பிரதேசத்தை உருவாக்கி தீகவாபியில் தனிப் பிரதேச சபையையும் உருவாக்குவதே அவர்களுடைய இலக்காக காணப்படுகிறது.
ஒலுவில் துறைமுகம் தீகவாபி பிரதேசம் அஷ்ரப் நகர் பகுதியிலுள்ள காணி இறக்காமம் பகுதியில் இருக்கின்ற மலைகள் வரிப்பத்தாஞ்சேனை பகுதியிலிருக்கின்ற காணிகள் போன்றவற்றை கையகப்படுத்தும் திட்டமே இது என்பது மற்றுமொறு முக்கிய விடயமாகும்.
இதற்காக இன்றிருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் இணைந்து இந்த செயற்பாட்டிற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது போல முஸ்லிம்களுடைய விவகாரத்திலும் அதிகம் கவனம் செலுத்தி முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுட்டால் மாத்திரமே இதற்கான தீர்வினை வழங்க முடியும். ஒற்றுமையின் அவசியம் உள்ள இந்த காலத்தில் முஸ்லிம் தலைவர்கள் பிரிந்து செல்வது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
