இறக்காம சிலை வைப்பை முதலில் பகிரங்கமாக கண்டித்த கட்சி
உலமா கட்சி. எமக்கு அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் அரசியல்
அதிகாரம் இல்லை என்பதால் அறிக்கை விடத்தான் முடியும். ஆனாலும்
இறக்காமம் சிலை விடயமாக உலமா கட்சி தெளிவான நிலைப்பாட்டில்
உள்ளது.
இந்த அநியாயத்துக்கெதிராக முதலில் அம்பாறை மாவட்ட
முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, கிழக்கு மாகாண முதலமைச்சர்,
அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரசின் எம் பீக்கள், மாகாண சபை
உறுப்பினர்களுக்கெதிராக ஜனநாயக ரீதியில் அமைதியான ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட வேண்டும். இது முதலில் இறக்காமத்தில் ஆரம்பிக்கப்பட
வேண்டும்.
இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டால் நிச்சயம்
உலமா கட்சி கலந்து கொள்ளும். உலமா கட்சி கலந்து கொள்கிறது என்றால்
அது பாரிய அதிர்வலையை உருவாக்கி முஸ்லிம் காங்கிரசும் ஐ தே கவும்
சிலையை நீக்கும் முயற்சியில் இறங்கும். இது தவிர வேறு வழி இருப்பதாக
தெரியவில்லை.
அத்துடன் இறக்காமம் சிலை
வைப்பு விடயம் அரசியலோடு சம்பந்தப்பட்டது. அதனை நீதி மன்றம்
கொண்டு சென்று வெல்ல முடியும் என்றால் எக்கச்சக்கமான
சட்டத்தரணிகளைக்கொண்ட முஸ்லிம் காங்கிரசால் ஏன் முடியவில்லை?
அவர்களால் முடியாது என்றால் முஸ்லிம் காங்குரசின் சட்டத்தரணிகளை
அரசியலை விட்டும் அடித்து விரட்டுங்கள்.
அதன்பின் யாரும் தமிழ்
சட்டத்தரணியை பிடித்து உலமா கட்சி வழக்கு தாக்கல் செய்யும் இன்ஷா
அல்லாஹ். மக்களே புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு அப்பட்டமான சதி நாடகம். இதன் பின்னால் மு. காவே உண்டு.
உலமா கட்சி
