(எம்.எம்.ஜபீர்)
மன்னார் முசலி பிரதேச முஸ்லிம் மக்களின்
பாரம்பரிய வாழிடங்களின் உரிமையப்பெற்றுத்தருமாறும், வில்பத்து வர்தமானி
அறிவித்தலை உடனடியாக இரத்துசெய்யுமாறும் கோரி இலங்கை இளைஞர் கூட்டமைப்பின்
ஏற்பாட்டில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலிக்கு முன்னாள் இன்று
கவனயீர்புப் போராட்டம் இடம்பெற்றது.
ஜூம்ஆ தொழுகை
தொடர்ந்து இடம்பெற்ற பேரணி பள்ளிவாசலிக்கு முன்னால் இருந்து ஆரம்பமாகி
கல்முனை பிரதான வீதியால் சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச
செயலகம் நிர்வாக உத்தியோகத்தர் எம்.ரீ.ஏ.வாஹிடிடம் இலங்கை இளைஞர்
கூட்டமைப்பின் தலைவரும் அம்பாரை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான
இசட்.எம்.ஸாஜீத் மகஜரை கையளித்தார்.
