ஆதிவாசிகளுக்கும் தேசியப் பட்டியல் வேண்டுமாம்

NEWS
0


தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என திருகோணமலை – மூதூர் ஆதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதிவாசி குடிகளுக்கான இணைப்பாளர் கே.சி.சிறிலாலை பாட்டாளிபுரத்தில் சந்தித்தபோதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படும் பட்சத்திலேயே தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் எனவும் மூதூர் கிழக்கு பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கிழக்கு மூதூரில் வசிக்கும் ஆதிவாசிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு, பிரதமரின் இணைப்பாளர் இன்று அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default