விகாரை - பள்ளி அமைப்பதில் பிரச்சினை உண்டு பண்ணுகின்றனர்; ஜனாதிபதி

NEWS


ஓட்டமாவடியிலிருந்து சிலோன் முஸ்லிம் செய்தியாளர் றிஸ்வி

அம்பாறை மாவட்டத்தில் இறக்காம பிரதேசத்தில் விகாரை ஒன்று அமைப்பதில் சிக்கல் தோன்றியிருப்பதாக நான் கேள்விப்பட்டேன் ஊடகங்களில் பார்த்தேன் இப்படி பிரச்சினைகளை அரசியலுக்காக உண்டு பண்ணுகிறார்கள்.இலங்கை நாடு மூவினங்களும் சமாதானமாக வாழும் நாடு. என்னை முஸ்லிம்களே தேர்வு செய்தனர் எனக்குறிப்பிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன,

ஓட்டமாவடி தேசிய பாடசாலையி்ன் நுாற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பொழுதே இதனை அவர் தெரிவித்தார்,

மேலும் கருத்துக்களை வெளியிட்ட ஜனாதிபதி,

இந்த நாட்டில் எப்பிரதேசத்திலும் பள்ளிவாசல்கள், கோயில்கள், விகாரைகள் கட்ட முடியும் இதனை ஒரு பிரச்சினையாக கருதினால் எதிர்காலத்தில் இவற்றை கட்டுவதற்கு பாரிய பிரச்சினை தோன்றலாம் மதங்கள் அனைத்தும் நல்லிணக்கத்தை போதிக்கின்றது, சமாதானத்தை அதிகம் விரும்பினார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். என்று குறிப்பிட்டார்.

மதஸ்தலங்களை அமைப்பதன் மூலம் பிரச்சினைகளை உண்டு பண்ணுகின்றனர் அவர்களுக்கு நல்லாட்சி நிலைப்பதில் கோபம் அவற்றை விரைவில் நிறுத்துவோம் என்றார்.
Tags
3/related/default