சிலோன் முஸ்லிம் விஷேட செய்தியாளர்
கெகிறாவ கல்வி வலயத்துக்கு உட்பட்ட கனேவல்பொல முஸ்லீம் மகா வித்தியாலயம் 4 கிராமங்களை உள்ளடக்கிய பாடசாலையாகும். இப் பாடசாலை அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை எனும் செயற்றிட்டத்துக்கு இப் பாடசாலை தெரிவு செய்யப்படுள்ளது. இப் பாடசாலைக்கு வெளியில் இருந்து அதிக மாணவர்கள் வருகின்றனர்.
கனேவல்பொல முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் வளாகத்தில் பாடசாலை அதிபருடன் இணைந்து அரச சாரா நிறுவனம் ஒன்றின் நிதி ஒதுக்கீடுட்டில் நிறுவனத்தினால் நிறுவப்பட்டு வரும் தனியார் பாலர் பாடசாலை ஒன்று நிறுவப்பட்டு வருவதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்தது.
இவ் ஆர்ப்பாட்டம் நேற்றுக் காலை பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபரை மாற்றுமாறும் பாடசாலை காணியை தனியாருக்கு விற்காதே என்றும் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை கெகிறாவ பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கெக்கிராவ கல்வி வலய பணிப்பாளர் கனேவல்பொல பாடசாலை க்கு விஜயம் செய்து நிலைமையை நேரடியாக கண்டறிந்து அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடி தற்காலிகமாக கட்டிட வேலைகளை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள் கலைந்து சென்றனர்.
