ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்களை நீக்கிவிட்டு, பலவீனமானவர்களை தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பது கட்சியை பலவீனப்படுத்துவதற்கான ஒரு முயற்சியேயன்றி வேறில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய தொகுதி அமைப்பாளர் நியமனம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார். நாளுக்கு நாள் கட்சியின் நடவடிக்கைகள் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. கட்சி மீது ஆதரவில்லாத, உணர்வற்றவர்களின் தேவையாக, கட்சியை பலவீனப்படுத்துவது மாறியுள்ளது.
இத்தகையவர்களுக்கு, மக்கள் யார் பக்கம் இருக்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது எனவும் சந்தர்ப்பம் வரும் போது மக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றிகள் live360
