கூட்டுஎதிரணியின் மேதினக் கூட்டத்திற்கு ரணிலின் அறிவுரை

NEWS
0
காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள கூட்டுஎதிரணியின் மேதினக் கூட்டத்திற்கு ரணில் விக்கிரமசிங்க பல அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை வழங்க சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் அடுத்த வாரம் கூட்டுஎதிரணியின் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடுவதற்கும் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும்,இதில் கலந்துக்கொள்ளவரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்துத் தருமாறும் பிரதமர் உத்தரவிட்;டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கூட்டுஎதிரணியின் மேதினக் கூட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் அனைத்தையும் சிறந்த முறையில் பெற்றுக்கொடுக்குமாறும் பிரதமர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் பிரதமர் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

நன்றிகள் live360
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default