பன்சல அமைப்பதற்கு எதிராக குரல்கொடுக்கும் அதாஉல்லா முஸ்லிம்களுக்கு செய்தது என்ன



கடந்த அரசாங்கத்தில் வட்டமடு பொத்தானை போன்ற காணிகளை தொல்பொருள் திணைக்களம், வனயியலாளர்கள் அபகரிக்கும் போதும் மௌனமாக இருந்தவரும் அதுபொல நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தினை கையளிக்க முடியாத கையாளாகாத தனத்தை கொண்டவருமான முன்னால் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் முந்தநாள் ஊடகங்களில் மாயக்கள்ளி விகாரை அமைப்பு தொடர்பாக குரல் கொடுத்திருப்பது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என கிழக்கு முஸ்லிம்கள் இணைய பேரவை குறிப்பி்ட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் மஹிந்தவின் செல்லப் பிள்ளையாக இருந்த அதாவுல்லாஹ் அன்று இருந்த முஸ்லிம்களினுடைய காணிகளினுடைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து இருக்க முடியும். கிழக்கு மாகாணத்தில் அதிகபடியாக முஸ்லிம்கள் வாழுகின்ற அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 35000 ஏக்கர் நிலங்களை இழந்து தவிக்கம் முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்க முடியும்.

ஆனால் அப்படியான விடயத்தை அதாவுல்லாஹ் செய்யாமல் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கடந்த அரசாங்கத்தின் இனவாத யெற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படும் இப்படியான செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது கேவலமான ஒன்றாக கருதப்படுகிறது.

முன்னால் அமைச்சர் அதாவுல்லாஹ் மக்களால் தோற்கடிக்கப்பட்டு வீட்டில் இருக்கின்ற ஒருவராக காணப்படுகின்றார். அவரினுடைய வாக்கினுடைய எண்ணிக்கை அவர் பேசுகின்ற தன்மைக்கும் மாறானது. அவர் சமூகம் தொடர்பாக பேசுவதற்கு எந்தவொரு அறுகதையும் இல்லை. அபிவிருத்தி அரசியலில் கொடி கட்டிப் பறந்தாலும் முஸ்லிம் மக்களுடைய சம்பந்தமாக குரல் கொடுக்கவில்லை.

உங்களுக்கு தெரியும் பொத்துவில் பிதேசத்தில் இருக்கிற முகுது மஹா விகாரை கட்டுமான பணி பொத்துவல் வேஹாமம் காணிப் பிரச்சினை வட்டமடு பொத்தானை காணிப் பிரச்சினை அஷ்ரப் நகர் தீகவாபி காணிப் பிரச்சினை அஷ்ரப் நகரில் இருக்கின்ற இராணுவத்தினுடைய அத்துமீறல் குடியேற்றங்கள் ஒலுவில் துறைமுகத்தில் இருக்கின்ற பிரச்சினை ஒலுவில் துறைமுகத்தில் சிங்கள பேரினவாதிகள் நடத்துகின்ற அரசியல் ஒலுவில் பரதேசத்திலுள்ள இராணுவ முகாம்கள் அங்கிருக்கின்ற புத்தர் சிலைகள் இப்படியான பிரச்சினைகளின் போது கடந்த அரசாங்கத்தில் மௌனமாக இருந்த அதாவுல்லாஹ் இன்று நல்லாட்சி  அரசினை விசனம் செய்தும் அதனை விமர்சனம் செய்தும் பேசுவது  மிகவும் கேவலமான ஒன்றாக இருக்கிறது.

எப்படித்தான் இன்றைய அரசாங்கத்தில் பிரச்சினை நடந்தாலும் அவற்றை பேசி தீர்க்க கூடிய நிலமை இன்று காணப்படுகிறது. குறிப்பாக கடந்த அரசாங்கத்தில் கூக்குரலிட்ட பொதுபலசேனா போன்ற அமைப்புகள் இன்றும் செயற்பட்டு கொண்டு தான் இருக்கின்றது. இவ் அமைப்புக்களை பின் நின்று செயற்படுத்துபவர்கள் கடந்த அரசாங்கத்தில் இருந்த முக்கிய ஆட்சியாளர்கள் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

கடந்த அரசாங்கத்தில் பொதுபலசேனா சிங்கள ராவய ராவண வளய போன்ற அமைப்புக்கள் இன்றும் அது தொழிற்பாட்டில் இயங்கி கொண்டிருப்பதை காண முடிகிறது. இவர்களை அதிகமதிகம் மஹிந்த சஹாக்களுடன் இன்றும் காண முடிகிறது. இன்றைய பிரச்சினைகளை யார் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அதை விடுத்து பிரச்சினைகளை தவிர்ப்பதற்கான செயன்முறைகளை செய்து கொண்டு இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்களுடைய செயற்பாடுகளை குறுக்கிடாது அமைதியாக வீட்டில் இருக்குமாறு அதாவுல்லாஹ்வுக்கு முஸ்லிம் புத்தி ஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றர்கள்.