அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி, டொனால்ட்
டிரம்பின் பாதுகாப்பு மற்றும் அவரின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக 120
மில்லியன் டொலர் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் பாதுகாப்பு பணியில்
ஈடுப்பட்டிருக்கும், புலனாய்வு அதிகாரிகளுக்கு 60 மில்லியன் டொலர் செலவு
செய்யப்படுகிறது எனவும் வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி
வெளியிட்டிருக்கிறது.
மேலும், இந்த செய்தியில், அமெரிக்காவின் நிவ்யோர்க் பொலிஸாருக்கு மட்டும்
50 மில்லியன் டொலர் செலவு செய்யப்படுகிறது, இது தவிர்ந்து டிரம்பின்
குடும்பத்தினரின் பாதுகாப்பு செலவு 3.4 மில்லியன் டொலர் எனவும் அந்த
செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
