ஈரான் சுரங்க விபத்தில் 35 பேர் பலி



ஈரான் நாட்டில் வடக்குப் பகுதியில் ஸெமெஸ்டான்யுர்ட் பகுதியில் உள்ள சுரங்கத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் 35 பேர் பலியாகியுள்ளதாக ஈரான் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இங்கு சுமார் 500 தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருவதாகவும்,இந்த விபத்தில் 50இற்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கியிருப்பாதாகவும்,இவர்களை மீட்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும்; தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதில் சிரமம் இருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.