மஹிந்தவின் வழக்கின் தீர்ப்பு ஜூன் மாதம்!



மஹிந்த ராஜபக்ஸவை, தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவராக அறிவிக்க கோரிய வழக்கில், எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களால், குறித்த மனு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த மனு விசாரணைக்கு நேற்று எடுத்தக்கொள்ளப்பட்டபோது, ஜூன் மாதத்தின் முதலாம் திகதி தீர்ப்பு வழங்கப்படுமென நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.