அமீரகத்தின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான எதிசலாத் தனது போஸ்ட்பெய்டு பிஸ்னஸ் வாடிக்கையாளர்களுக்கு 25 ஜிபி டேட்டா இலவச சலுகையை அறிவித்துள்ளது. (special offer of 25GB free data with the subscription of mobile add-ons enabling its business customers)
இந்த சலுகை ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகக்கூடியது. இந்த திட்டத்தில் இணைய விரும்புபவர்களுக்கு ஏதுவாக குறைந்தபட்ச ஆரம்பக் கட்டணமாக 30 திர்ஹம் முதல் ஆரம்பமாகும் பலவகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில் ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ளவர்களும் புதிதாக இணைய விரும்புபவர்களும் இணைந்து கொள்ளலாம்.(Business customers can subscribe to any mobile add-on of choice starting Dh30 per month and avail the offer)
Etisalat's high-speed 4G LTE network அடிப்படையில் வழங்கப்படும் இந்த சிறப்புச் சலுகை சேவையில் வழமைபோல் லோக்கல் மற்றும் சர்வதேச நிமிடங்கள் (Local & International Minutes), ரோமிங் நிமிடங்கள் (Roaming Minutes), டாட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ்ஸூம் (SMS) அடக்கம்.
மேலும் விபரங்களுக்கு எதிசலாத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை 800 5800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவும். (For additional details customers can call Etisalat's dedicated SMB Call Centre at 800 5800)
Source: Khaleej Times
