கொழும்பில் 298 பாடசாலைகளில் டெங்கு குடம்பிகள்




மேல்மாகாணத்தில் 10,089 பாடசாலைகளில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது 298 பாடசாலைகளில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் பாடசாலை சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு 630 பாடசாலைகளுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், 106 பாடசாலைகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 28,29ஆம் திகதிகளில் மேல்மாகாணத்தின் சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போதே 298 பாடசாலைகளில் டெங்கு குடம்பிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பாடசாலைகளில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் தொடர்பில் தமக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன டெங்கு ஒழிப்பு பிரிவினரிடம் அறிவித்துள்ளார்.