முடிந்தால் மே முதலாம் திகதி காலிமுகத்திடலை மக்களைக் கொண்டு நிரப்புமாறு அரசாங்கம் விடுத்த சவாலை கூட்டு எதிரணி நிறைவேற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சவாலை தாம் முறியடித்துள்ளதால் விரைவில் தேர்தலை நடத்துமாறு நாமல் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசத்துரோக அரசியலுக்கு எதிரானவர்களும்,மஹிந்தவை நேசிப்பவர்களுமே காலி முகத்திடலில் மேதினத்தன்று ஒன்று கூடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்கள் கூட்டத்தை பார்த்தப் பிறகாவது பிரதமரும்,ஜனாதிபதியும் நாட்டுக்கு தேவையானது என்ன என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் பலம் அனைத்தும் மஹிந்த ராஜபக்ஸவிடம் இருப்பதாகவும், எனவே வெகு விரைவில் தேர்தலை நடத்துமாறு சவால் விடுப்பதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
