பனிஸ் சாப்பிட்டு பரிதாபமாக உயிரழந்த 3 வயது குழந்தை; சிலாபத்தில் சம்பவம்

NEWS
0 minute read


சிலாபத்தில் பனிஸ் துண்டொன்று தொண்டையில் சிக்கியதில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இவ்வாறு 3 வயதான குழந்தையே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை குறித்த குழந்தைக்கு பனிஸை உணவாக வழங்கி கொண்டிருந்த போது அதில் சிறு துண்டொன்று தொண்டையில் சிக்கியுள்ளது.

பின்னர் குழந்தையை பெற்றோர்,  சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அங்கு குழந்தை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் சடலம் தொடர்பான பிரேதபரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
To Top