முசலிக்குப் புதிய பிரதேச செயலாளர் நியமனம்



 (முசலியூர் .கே.சி.எம்.அஸ்ஹர்)

முசலிபிரதேசசெயலக்திற்குபுதியபிரதேசசெயலாளராககே.எஸ். வசந்தகுமார்நியமிக்கப்பட்'டுள்ளார். இவர் மன்னார் பிரேதசசெயலகத்தில் கடமைபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . முசலிப் பிரதேசசெயலகத்தில் நீண்டகாலம் சேவைசெய்த,செ.கேதீஸ்வரன் மாந்தைப் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் .திருகேதீஸ்வரன் அவர்கள் முசலிப் பிரதேசத்தில் பிரதேசசெயலாளராகக் கடமைபுரிந்தகாலத்தில் மீள் குடியேற்றம், ஜீவனோபாய உதவி, வாழ்வாதார உதவி, அரச காணி பெற்றுக் கொடுத்தல், வீடு வழங்குதல்போன்றவிடயங்களில் மிகுந்த சேவை புரிந்துள்ளார்.

'வசதிகள் குறைந்தபிரதேசம் முசலி'என்பதனால், இங்கு கடமை புரிவதற்கு பிரதேச செயலாளர்கள் முன்வருவதில்லை. பல பிரதேச செயலாளர்கள்பின்னின்ற சரிதமுண்டு. இவ்வாறான நிலமையிலேயே திருகேதீஸ்வரன் இங்கு கடமை புரிய முன்வந்தார். இவர் ஓரு கிராமத்தைச் சேர்ந்தவன்  என்பத்னாலேயேஇவரால் கிராமமக்களின் ஆதங்கத்தை இலகுவில் புரிந்துகொள்ளமுடிந்தது.

புதிதாக வருகை தந்துள்ள பிரதேச செயலாளர் எதிர்கொள்ளும் சவால்களாக பின்வருவனவற்றைப் பட்டியல்படுத்தலாம்.
1.மீள் குடியேற்றம்
2.அரசகாணிகையளிப்பு
3.ஜீவனோபாயம்
4.சமுர்த்தி தெரிவு (புதியபயனாளிகள்)
5.பிரதேசஉட்கட்டமைப்புவசதி
6.உயர்பாதுகாப்பு வலயதனியார் காணிகளைவிடுவித்துஉரியவர்களுக்குவழங்குதல்.
7.யுத்தத்தால் இடம்பெயர்ந்ததமிழ்,முஸ்லிம் மக்களைவிருப்புடன் மீளக்குடியேறும் சூழலைஉருவாக்கல்.
8.சிலாவத்துறை வைத்தியசாலையிலகாணப்படும் பின்னடைவுகளைசீர்செய்தல்
9.வருகின்ற அபிவிருத்திநிதிகளைகிராமங்களிடையேசமமாகப் பகிர்தல்
10.வரட்சியால் வெகுவாகப் பாதிக்கப்பட்டமுசலிமக்களுக்குதுரிதமாகவரட்சிநிவாரணம் பெற்றுக்கொடுத்தல்
11.பிரதேச கல்விஅடைவுமட்டத்தைகண்காணித்தல்,ஆலோசனைவழங்கல்