அட்டாளைச்சேனையில் கலாசாரப் போட்டி






(எம்.ஜே.எம்.சஜீத்)

அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தினால் நடாத்தப்பட்டுவரும்  கலாசார போட்டி – 2017 நிகழ்வின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று (14) இரவு அட்டாளைச்சேனை றகுமானியாபாத் கடங்கரைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

அல்-இபாதா கலாசார மன்றத்தின் கலாசார குழு தலைவரும், அதிபருமான எம்.ஏ.அன்சார் தலைமையில் நடைபெற்ற இப்போட்டி இந்நிகழ்வில் அக்கரைப்பற்று, இறக்காமம், சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களிலிருந்து பொல்லடிக் குழுக்கள் பங்குபற்றியது.

இதன்போது அல்-இபாதா கலாசார மன்றத்தின் போசகரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.பாயிஸ், கலாசார மன்றத்தின் செயலாளர் எம்.எஸ்.எம். பாஹீம், உபதலைவர் ஏ.பீ.ஏ.கபூர், மினன் பள்ளிவாசல் தலைவர் நஜீமுத்தீன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.