கடந்த வருடம் மேதினக்கூட்டத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்த பஸ் வண்டி மோதி மரணித்த சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இறுதி வருடத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த கந்தரையைச் சேர்ந்த மாணவன் அஹமட் ஷஹ்ரி (வயது 26) அவர்களின் 1 வருட ஞாபகர்த்தத்தை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று கந்தரை முஹியத்தீன் ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில் நூரானியா மத்ரஸாவின் பணிப்பாளர் அர்கம் நூராமித் மற்றும் கந்தரை ஜயபோதிய விஹாரையின் அதிபதி மாரகொல்லிய விமலரங்சி தேரர் உட்பட சிங்கள முஸ்லிம் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இங்கு பெருந்தொகையான சிங்கள இளைஞர்களும் இரத்ததானம் செய்ய முன்வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
