நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ளது; மாத்தளை மக்கள் அவதானமாக இருக்கவும்

NEWS


மாத்தறை நகரில் ஆஷோசித பிரதேசத்தில் நில்வலா கங்கை பெருகெடுத்துள்ளதன் காரணமாக மாத்தறை - பண்டத்தர உட்பட பல பிரதேசங்களில் அவதான நிலைமை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாதுகல, பண்டத்தர, வடகெதர, மதுகல, வெல்ல, பிலதுவ மற்றும் வேரகம்பிட பிரதேசங்களில் உள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, மாத்தறை - கொடகம பிரதேங்களில், தற்போது 4 அடி வரை வெள்ள நீரினால் மூழ்கியுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வெள்ள நீர் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கான நிவாரணங்களுடன் இந்திய கப்பல் ஒன்று தற்போது கொழும்பு துறைமுகத்தினை தற்போது அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
3/related/default