716 இராணுவத்தினருடன் சீனாவின் 3 கப்பல்கள் இலங்கைக்கு

NEWS
0 minute read
0


இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் 3 சீன கப்பல்கள் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.

இதில் 5 வைத்தியக்குழுக்கள் மற்றும் 10 சிறிய படகுகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன இராணுவத்தின் ‘சேன் சூன்,ஜின் சோவ் மற்றும் சாவ் ஹோ’ஆகிய கப்பல்களே இலங்கை வந்துள்ளதாகவும், இதில் 204 அதிகாரிகள் மற்றும் 716 இராணுவத்திரும் வருகைத் தந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சீன கப்பலின் அதிகாரிகளை வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன நேற்று மாலை உத்தியோகப்பூர்வமாக வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
To Top