எம்.எஸ்.எம்.ஸாகிர்
கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸ் ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (16) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுசரணையில், கல்லூரியின் அதிபர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க தலைமையில், பாடசாலையின் தமிழ்ப்பிரிவுத் தலைவி நஸ்லிமா அமீன் ஆசிரியையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில்,அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவின் பணிப்பாளர் தாஜுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உட்பட கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோ ர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் அதிபர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க உரையாற்றுவதையும் பிர்தௌஸ் மௌலவி பயான் மற்றும் துஆப் பிரார்த்தனை புரிவதையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
(படங்கள் : ஜெஹ்ஷான் அஹம்மட்)

