இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் மஹிந்த பாகிஸ்தானில் பேச்சு

NEWS
0


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாகிஸ்தானின்  தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ளார்.

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 'தேசிய பாதுகாப்பு மற்றும் யுத்தம்'என்ற மாநாட்டிலேயே அவர் உரையாற்றவுள்ளார்.

இந்த உரையில் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு எனும் விடயமும் பேசப்படவுள்ளதாக மஹிந்தவின் ஊடக அதிகாரி குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதானியான லெப்டினன்ட் ஜெனரல் ரிஸ்வான் அக்தார் அதற்கான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

'இலங்கையின்  யுத்த அனுபவம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள்' எனும் தலைப்பில் மஹிந்த ராஜபக்ஸ உரையாற்றவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default