டெங்கு வாரத்தை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை முற்றாக இடை நிறுத்தி இலங்கையில் அனைத்து பாடசாலைகளிலும் சிரமதானபணியை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு தெரிவித்தது. இணங்க இன்று டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் 28.07.2017 அன்று முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தில் முப்படையினரும் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த வேலைத்திட்டமானது 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், 29 ஆம் திகதி சனிக்கிழமையும், 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 தினங்களிலும் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்தவகையில் இறக்காமம் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இறக்காமம் அல் அஷ்ரப் மகா வித்தியாலயம்,றோயல் கணிஷ்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்களும் இணைந்து பாடசாலையையும் அதனை அண்டியுள்ள பகுதிகளையும் துப்புரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது நுளம்புகள் பரவும் இடங்களை அழித்து புகை விசுறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, பாடசாலை வளவுகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடக்கது. சிலோன் முஸ்லிம் கிழக்கு பிராந்திய காரியாலயம்
எஸ்.எம்.சன்சீர் (இறக்காமம்)




