அட்டாளைச்சேனை அழகிய ஊர் கடலும், ஆறும், குன்றுகளும் வயல்வரப்புகளும் சின்னச்சின்ன காடுகளும் என நாலாபுறமும் மனதை கொள்ளை கொள்ளும் அழகு இந்த அழகிய ஊரை சுற்றுலாத்தளமாக மாற்ற முடியும் ஆகால் காலா காலமாக அரசியலால் இந்த ஊர் சின்னாபின்னமாகி வீண் விளையாட்டுக்குள் சிக்கிவிட்டது.
கோணாவத்தை ஆற்றோரம் நடைபாதை அமைத்து உடற்பயிற்சிக்கு உத்வேமளிக்கலாம், இதனை விளையாட்டு பிரதியமைச்சர் ஹரீஸ் மூலம் செய்விக்க முடியும்,
முல்லைத்தீவை சாரந்த பகுதிகளை சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பாவங்காய் வீதியில் பெரிய பதாதை பொருத்தி லகூன் சபாரி கூட்டி செல்ல முடியும்,
ஒலுவில் கடற்கரையில் பூங்கா அமைத்து உள்ளுர் சுற்றுலாப்பயணிகளை கவரமுடியும் ஆனால் ஒன்றுமே செய்ய யாரிடமும் திட்டமும் இல்லலை அப்படியிருந்தாலும் அதன அரசியல் காரணியாக்கி முடக்கிவிடுவர்
புதிய தேசம் உருவாக்க புதியவ்களை சபைகளுக்கு அனுப்புவோம்.
பஹத் ஏ.மஜீத்

0 கருத்துகள்