ஜப்பான் அரசின் அதிரடி முடிவால் ஜப்பான் வாழ் இலங்கையர்களுக்கு சிக்கல்.

NEWS
0


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
ஜப்பானில் சில இலங்கையர் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதால் அணைத்து இலங்கையர்களையும் வெளியேற்ற நடவடிக்கை  ஜப்பானிலுள்ள இலங்கையர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஜப்பானில் வாழும் இலங்கையர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் மோதல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

Sri Lankan Festival என்ற நிகழ்விலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் இரண்டு குழுவுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தீர்க்கும் நடவடிக்கையில் ஜப்பான் பொலிஸார் ஈடுபட்டனர். இதன்போது இலங்கையர்கள் சிலர் ஜப்பான் பொலிஸார் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டனர். இதனையடுத்த ஜப்பானில் வாழும் இலங்கையர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினை அடுத்து ஜப்பான் பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் விசேட விசாரணை முறை ஒன்றை ஜப்பான் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default