பௌத்த மதத்தின்மீது கை வைப்பதனால், தமிழ்-முஸ்லிம் மக்களின் ஆதரவு அரசுக்குக் கிடைக்குமா என்றால் அப்படியானதொரு நிலை அறவே இல்லை.
பௌத்த மதத்துக்கான முதன்மை இடம் என்று சொல்லும்போது பல விடயங்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.அவற்றுள் நடைமுறையில் நாம் கண்டு வருகின்ற சில விடயங்களை மாத்திரம் எடுத்துப் பார்ப்போம்.
மாதாந்தம் வரும் போயா தினம் பௌத்த மக்களுக்கு உரியதாகும்.அது அரச விடுமுறையாக ஆக்கப்பட்டுள்ளது.இந்த அரச விடுமுறை பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை நிலையாகும். இதற்கு எதிராக ஏனைய மதங்கள் குரல் எழுப்புகின்றனவா என்றால் இல்லவே இல்லை என்பதே அதற்கான பதில்.
போயா தினத்தில் இறைச்சிக் கடைகள் அனைத்தும் மூடப்படும்.இதனால் இந்த இறைச்சிக் கடைகளை நடத்தும் முஸ்லிம்கள் ஒருபோதும் அசௌகரியம் அடைந்ததில்லை.

அதேபோல் வெசாக் மற்றும் பொசன் தினங்களும், அந்தத் தினங்களில் வழங்கப்பட்டு வரும் அரச விடுமுறைகளும் பௌத்த மதத்துக்கான முதன்மை இடங்களாக இருக்கின்றன.இந்தத் தினங்களில் இடம்பெறும் கொண்டாட்டங்களால் ஏனைய மதங்களைப் பின்பற்றுவோர் பாதிக்கப்படுவதில்லை.
இத்தகைய பின்புலத்தில் எவருடைய நன்மைக்காக இந்த அரசு பௌத்த மதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.அந்தக் கேள்வியை சிங்கள மக்கள் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்டுக் கொண்டால், தங்களது அரசியல் இருப்புக்காக-க் குறுகிய அரசியல் இலாபத்துக்காக மகிந்த அணியினர் நடத்தும் போலி நாடகம்தான் இந்தப் போலிப் பரப்புரை என்பதை அவர்கள் விளங்கிக்கொள்வர். மகிந்த அணியினரின் இவ்வாறான பரப்புரைகளையெல்லாம் முறிய டித்து -பௌத்த மக்களுக்கு உண்மை நிலைமையைத் தெளிவுபடுத்தி, இந்த நாட்டுக்கும் சிறுபான்மை இன மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய புதிய அரசமைப்பை இந்த அரசு கொண்டு உருவாகுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

0 கருத்துகள்