அனுமதியின்றி நடாத்தப்படுகிறதா அன்சார் மௌலவியின் பெண்கள் மத்ரசா?

NEWS
1


இலங்கையில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மற்றும் அதுசார்ந்த குழுக்கள் நடாத்தும் பெண்கள் முழுநர பகுதிநேர மத்ரசாக்கள் அனுமதியுடன் நடைபறுகிறதா? அல்லது அதுகுறித்து யார் பேசுவது இதனை கண்காணிப்பது யார் என முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கோரப்பட்டுள்ளது.

கிழக்குமாகாணத்தில் அதிக பெண்கள் மத்ரசாக்களை நடாத்தும் அன்சார் (தப்லீகி)  மௌலவி உள்ளிட்ட பல தவ்ஹீத் கொள்கை சார்ந்தவர்களின் கல்லுாரிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதுகுறித்த பதிவு விபரங்களை வெளியிடுமாறும் குறித்த கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய முஸ்லிம் இயக்கம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் பிரதியொன்று எமது செய்திப்பிரிவிற்கும் கிடைக்கப் பெற்றுள்ளது.
Tags

Post a Comment

1 Comments

  1. தேசப்பற்றுள்ள தேசிய முஸ்லிம் இயக்கம் உண்மையில் முஸ்லிம்களின் நலன் விரும்பி செயட்படும் அமைப்பு என்றால் அவர்கள் இப்படி அமைச்சுகளிடமும் பக்க சார்பாக செயட்படும் அரசாங்கத்திடமும் கதை கேட்டு கடிதம் அனுப்பும் எட்டப்பன் வேலையை செய்யாமல் நேரடியாக தமது பிரதிநிதிகளை அனுப்பி அதிபர்களை அணுகி ஆலோசனை வழங்கல் மற்றும் விளக்கம் கோரல் போன்ற செயட்பாடுகளில் ஈடுபட்டிருப்பர். கடந்த அரசில் இருந்த காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களால்தான் முஸ்லீம் நகரம், வர்த்தக நிலையம், மத்ரஸாக்கள் பள்ளிவாசல்கள் என எல்லா இடமும் தீப்பிடித்தது. ஆரவாக்கோளாறுகளால் அவசரப்படாமல் உங்களுடைய காழ்ப்புணர்ச்சியை கலைத்துவிட்டு சற்று முஸ்லிமாகவும், அல்லது சமூக அக்கறையுடனும் செயட்படுமாறு இந்த இயக்கத்துக்கு வேண்டுகின்றோம். ( ஒற்றுமை விரும்பி)

    ReplyDelete
Post a Comment
3/related/default