டெங்கு புகை விசுறும் போது உணவகங்கள் மூடப்படல் வேண்டும் - சுகாதார வைத்திய அதிகாரி

NEWS


( ஐ. ஏ. காதிர் கான் )
  
மினுவாங்கொடை நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில், டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் புகை விசுறும் போது, உணவகங்கள் அனைத்தும் மூடப்படல் வேண்டும் என்றும், இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மினுவாங்கொடை பொது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சஷீ பிரியதர்ஷனீ தெரிவித்துள்ளார். 

 மினுவாங்கொடை பிரதேசத்தில் தற்போது டெங்கு நுளம்பை அளிக்கும் நோக்கில், பரவலாக புகை விசிறப்பட்டு வருகிறது.    இந்நேரத்தில் கூட, சில உணவக உரிமையாளர்கள் உணவகங்களைத் திறந்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். 

 சுகாதாரப் பிரிவினரால் டெங்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகை விசுறும் போது, உணவுப் பொருட்களுக்கு சில நேரம்  பாதிப்புக்கள் ஏற்பட இடமுண்டு. இதனாலேயே, உணவகங்களை மூடி விடுமாறு சகலரையும் அறிவுறுத்தியுள்ளோம். 

எனினும், இன்னும் சிலர் இதனைப் பொருட்படுத்தாது அசட்டை செய்து வருகின்றனர். இவ்வாறான உணவக உரிமையாளர்கள்க்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.     இதேவேளை, புகை விசுறப்படும் போது, இப் பிரதேசத்தில் மூடப்படாத உணவகங்களிலுள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுமெனவும் டொக்டர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Tags
3/related/default