18 வயதுக்கு குறைந்தவர்கள் வாகனம் செலுத்தினால், பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை

NEWS


பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்கள் வாகனங்களைச் செலுத்தும் பட்சத்தில், அவர்களது பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இதுபற்றித் தெரிவித்த மேற்படி சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோதாகொட, 

அண்மைக்காலமாக குறைந்த வயதுடையவர்கள் வாகனங்களைச் செலுத்துவதால் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

தலாவை பகுதியில், பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் நேற்று (23) மரணமானார். அதிவேகமாகச் செலுத்தப்பட்ட இம்மாணவரது மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Tags
3/related/default