எம்.எஸ்.எம்.ஸாகிர்
ஹெம்மாதகம அல் - அஸ்ஹர் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் ஓர்அங்கமாக நேற்று மரம் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
ஹெம்மாதகம பிரதேசத்தின் 1000 மரங்களை நடும் இயக்கம் பாடசாலைவளாகத்தில் நேற்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதலாம்படத்தில் பாடசாலை வளாகத்தில் தேசிய கீதம் இசைத்து நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்படுவதனையும் இரண்டாம் படத்தில் ஹெம்மாதகம கபுரக்க விஹாரையில் மரம் நடும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன் ஹெம்மாதகம பள்ளிவாசல்கள்சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.எம்.யூஸுப் உரையாற்றுவதையும் விஹாதிபதிஅகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் உதவிச் செயலாளர் மௌலவிஎம்.எஸ்.எம். தாசிம் ஆகியாரை படங்களில் காணலாம் .
இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.க.அமைப்பாளர் லதீப் பாரூக், வலயக்கல்விப் பணிப்பாளர்எஸ்.எம்.விஜயரத்ன பண்டார , உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ. எஸ்.எம். நஜிம், அதிபர்எம். பாஹிம் , முன்னாள் அதிபர்களான எம்.ஏ .எம். நிஸ்தார்,எம். ஜே.எம். நஜிமுதீன் ,முன்னாள் பிரதேச உறுப்பினர்களான எம்.ஆர்.எம். லியாவுதீன் , எம்.ஆர்.எம். ரிஸாஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.