வட்டமடு விவசாயிகள் தொடர்போராட்டம்; நாளை இரண்டாவது நாள்! என்ன நடக்கும்?

NEWS


வட்டமடு விவசாயிகள் முன்னெடுத்துள்ள காணிமீட்பு போராட்டம் வட்டமடு விவசாய காணியில் இன்று ஆரம்பித்துள்ளது, முஸ்லிம் விவசாயிகள் இழந்துள்ள 1500 - 2000 ஏக்கர் காணிகளை மீட்க விவசாய காணி உரிமையாளர்கள் முன்னெடுத்துள்ள இவ்வார்ப்பாட்டம் நாளையும் தொடரும் என விசாயிகள் எம்மிடம் தெரிவித்தனர்.

வெறும் வாய் வார்த்தைகளை அள்ளிவீசும் அரசியல்வாதிகள் இதுவரை எமக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவில்லை, ஆனால் நாங்கள் அவர்களை நம்பியிருந்தோம், அதிகாரிகள் எங்கள் காணிகளை விவசாயம் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.

இன்று முதலாவது நாள், நாளை இரண்டாவது நாள், நாளை மறுதினமும் இந்த போராட்டம் தொடரவுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.
Tags
3/related/default