இலங்கையுடனான போர் விமானங்களை மேம்படுத்தும் திட்டம் ஒன்று தொடர்பில் இஸ்ரேல் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையுடன் குறித்த பேச்சுவார்த்தையை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை, இஸ்ரேலிடம் இருந்து 16 போர் விமானங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
