மாகாணசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக பாயிஸ் அறிவிப்பு

NEWS

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதம அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் நோக்கிலேயே தாம் இந்த முடிவை எடுத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாநகரசபையில் தனித்து போட்டியிடுகின்றது.
ராஜகிரியவில் உள்ள கொழும்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மக்கள் காங்கிரஸ் நேற்று மாலை கட்டுப்பணத்தை செலுத்தியதை அடுத்தே மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் தேர்தலில் குதிக்கும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடத்தப்படவிருப்பதாக தேர்தல் அணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags
3/related/default