புதிய முறையில் பரீட்சைக்கு பதில் எழுதிய இரு மாணவர்கள் அகப்பட்டனர்

NEWS



தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு கையடக்கத்தொலைபேசியைப் பயன்படுத்தி பதில் எழுதிய இரு மாணவர்கள் பிடிபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் – வலிசிங்க ஹரிச்சந்திர பரீட்சை நிலையத்தில் வைபரின் உதவியுடன் பதில் எழுதிய மாணவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பரீட்சைககள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற கணித பாட பரீட்சையின் போது, குறித்த மாணவர் கையடக்கத்தொலைபேசியின் ஊடாக வைபர் தொழில்நுட்பத்தின் மூலம் விடைகளைப் பெற்று பரீட்சை எழுதிக் கொண்டிருந்த வேளையில், பரீட்சை கண்காணிப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி மற்றும் விடைத்தாள் ஆகியன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரம் பொலிஸாரினால் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை பரீட்சைகள் திணைக்களத்தினாலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் அந்த மாணவன் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பின் முன்னணி பாடசாலையொன்றிலும் நேற்று இடம்பெற்ற கணித பாட பரீட்சையின் போதும் கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்தி மாணவனொருவர் பரீட்சை எழுதியுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags
3/related/default