வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களின் ஆங்கில மொழி அறிவை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான ஒரு தகைமையாக கருத நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு தொழிலாளர்கள் தொழில் ரீதியில் கௌரவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த ஆங்கில மொழி அறிவு காரணமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில மொழி அறிவு உள்ளவர்களே வெளிநாட்டுக்கு தொழிலுக்கு செல்ல அனுமதி பெறுவார் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு நாடுகள் எமது நாட்டிலிருந்து தொழிலாளர்களை பெற்றுக் கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் நாட்டின் அந்நியச் செலாவணி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
