உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட வேண்டுமென வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால், அபேட்சகர்களைத் தெரிவு செய்து கொள்வது கடினமாகவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சகல உள்ளுராட்சி சபைகளிலும் இதேபோன்ற ஒரு நிலைமை உள்ளதாகவும், சகலரையும் திருப்திப்படுத்துவது பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அரசாங்க தரப்பில் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பொது மக்களுக்கு அன்பளிப்புப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், இவை எதுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கண்களுக்கு தென்படுவதில்லயெனவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
