முஸ்லிம்களே! நீங்கள் வாக்களிப்பவர்களுக்கு பின்வரும் தகமை இருக்கிறதா?


புதிய தேர்தல் முறையில் கீழ் நடக்கும் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில், வட்டாரத்தில் வேட்பாளர்களின் தகுதிகள் முக்கியத்துவம் பெறும் என்பதால் பொதுமக்கள் அவ்வேட்பாளர்களின் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தலாம்:
1) இறைபக்தி உள்ளவரா? ( படைத்தவனுக்கு மட்டுமே அஞ்சி அடிபணிந்து கடமை செய்யக்கூடியவரா)
2) ஊழலில் ஈடுபடாதவரா? (பொது மக்கள் சொத்தை ஆட்டைய போடாதவரா)
3) சமூக சேவையில் நாட்டமுள்ளவரா?
4) பதவிப்பித்து பிடிக்காதவரா?
5) உள்ளுராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்படும் அபிவிருத்தி, நிதி திட்டமிடல்களை விளங்கிக்கொள்ளும் திறமை உள்ளவரா?
6) கடன் சுமை, வருமானம் தரும் வழிகள் எதுவும் அற்றவரா? ( இப்படியானவர்கள் அரசியல் ஈடுபடுவதே மக்கள் பணத்தை சுருட்டத்தான்)
7) மக்களுடன் பண்பாக பழகக்கூடியவரா?
8) ஆளுமை உள்ளவரா?

போன்ற இன்னோரன்ன விடயங்களை கவனத்தில் கொண்டு வாக்களிக்க முடியும். இன்சா அல்லாஹ் நல்லதோர் அரசியல் சமூகத்தை உருவாக்க நாம் பாடுபடுவோம்.