இலங்கை முஸ்லிம்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பணத்திற்காக வாக்குளை விற்பார்களாக இருந்தால் அவர்களின் விற்பதற்கு சமம் என தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இயக்கத்தின் ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்கள் பின்வருமாறு,
வாக்குகள் என்பது உங்களின் உரிமைகள், இவைகளை இதுவரைகாலமும் விற்று விற்று அல்லது அடமானம் வைத்து பழக்கப்பட்ட நீங்கள் தேர்தலுக்கு பின்னர் அதனை மீண்டும் கேட்பது மடமைத்தனம், அதுபோலத்தான் இன்று தலைவர்கள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் குற்றம் சுமத்த முன்னர் நாம் திருந்த வேண்டும், வெறும் தொழிலுக்காக - டிரான்ஸ்பருக்காக வாக்குகளை அடமானம் வைக்கும் எம்மை போன்றவர்களின் சிந்தனைகள் மாறவேண்டும்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
