தைக்காநகர் வட்டாரத்தை அஜ்மல் வெல்வது என்பது எட்டாக்கனி - கலீல் முழக்கம்!



 றமீஸ்

தைக்காநகர் வட்டாரத்தை தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஜ்மல் வெல்வார் என பேசப்படுவது வெறும் மாயை என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கலீல் தெரிவித்துள்ளார்.

இன்று தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் கருத்துரைத்த அவர்,

தைக்காநகர் வட்டாரத்தை தேசிய காங்கிரஸ் ஒருபோதும் வென்றதுமில்லை, இனி வெல்லப்போவதுமில்லை முற்றுமுழுதாக அட்டாளைச்சேனை 15 - 16 ஆகிய குறிச்சிகளில் பெரும்பான்மை வாக்குப்பலத்தை கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஆலவிருட்சத்தை யாராலும் இறைவன் துணையுடன் அசைக்க முடியாது, உதுமாலெவ்வையின் கூட்டம் இம்முறையும் கடந்த முறைகளை போல மண்கவ்வுவது உறுதி எனவும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் சப்றின் மௌலவி மார்க்கப்பற்றுள்ள நல்ல இளைஞன் கறைபடியா ஒருவர் அவர் சபைக்கு செல்வது நாம் மார்க்க அறிஞர்களை கௌரவிப்பதற்கு சமம் எனவும் குறிப்பிட்டார்.

பொது வேட்பாளர் சப்றின் மௌலவிக்கு தனது வாழ்த்துக்களை குறிப்பிட்ட கலீல் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் பெரு வெற்றிபெறும் எனவும் குறிப்பிட்டார்.