(எம்.ஆர்.எம்.வஸீம்)
வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள் அனுப்பும் பணத்துக்கு வரி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை மக்கள் நம்பவேண்டாம் என நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்பவர்கள் அங்கிருந்து அனுப்பும் பணத்துக்கு வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமுகவலைத்தளங்களில் மேற்கொண்டுவரும் பிரசாரம் தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
